தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் 3 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அரசாணையில், "கோவிட்-19 ஆர்டிபிசிஆர் பரிசோதனையை முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் மேற்கொண்டால் 2500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்றுடையவரின் வீட்டிற்குச் சென்று பரிசோதனை செய்தால் கூடுதலாக 500 ரூபாய் வசூல் செய்து கொள்ளலாம்.