தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யோகா, இயற்கை மருத்துவப் படிப்பிற்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்! - யோகா, இயற்கை மருத்துவப் படிப்பு விண்ணப்பம்

சென்னை: யோகா, இயற்கை மருத்துவப் படிப்பிற்கு, ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை அறிவித்துள்ளது.

-indian-medicine-and-homeopathy
-indian-medicine-and-homeopathy

By

Published : Jul 31, 2020, 8:33 PM IST

இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சுய நிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 2020-21ஆம் ஆண்டில் பி.என்.ஒய்.எஸ் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு பன்னிரெண்டாம் வகுப்பில் அறிவியல் பாடங்களை எடுத்து, தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதற்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 28ஆம் தேதி மாலை 5 மணி வரை, www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் இயக்குநர் அலுவலகத்திலோ, தேர்வுக் குழு அலுவலகத்திலோ, கல்லூரிகளிலோ நேரில் வழங்கப்படமாட்டாது.

விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் 500 ரூபாயும், சிறப்புப் பிரிவினர் 100 ரூபாயும் என இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி, சென்னை- 106; எனும் முகவரியில் வரைவோலை(டிடி) எடுத்து அனுப்பவேண்டும். அதில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களிருந்தால் அதற்குரிய சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை இயக்குநர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை 600106 என்ற முகவரிக்கு தபால் அல்லது கொரியர் மூலமாகவோ, நேரிலோ ஆகஸ்ட் 31ஆம் தேதி, மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கும் பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பொறியியல் படிப்பிற்கு சான்றிதழ் பதிவேற்றம் எப்படி? காணொளி வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details