சென்னை: மனிதவள மேலாண்மை துறையின் முக்கிய கொள்கை விளக்க குறிப்பு தெரிவிக்கப்பட்டது. அதில் பேரிடர் மேலாண்மை பயிற்சி திட்டம் தொடர்பாக இயற்கை மற்றும் மனிதனால் உருவாகக் கூடிய பேரிடர் மேலாண்மை மற்றும் ஆபத்து குறைப்பு பற்றிய பயிற்சிகள், பல்வேறு தலைப்புகளின் கீழ் 24 பயிற்சித் திட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. செய்தித்துறை அலுவலர்களுக்கும் தகவல் பரிமாறுவது குறித்து பல்வேறு பயிற்சி அளிப்பட உள்ளது.
மனிதவள மேலாண்மை துறையின் முக்கிய கொள்கை விளக்க குறிப்பு - அரசுஅலுவலர்களுக்கு பயிற்சி
மனிதவள மேலாண்மை துறையின் முக்கிய கொள்கை விளக்க குறிப்பின்படி, பேரிடர் காலங்களில் மக்களை எவ்வாறு அணுகவேண்டும் என்பது குறித்து பலதரப்பட்ட அரசு அலுவலர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மனிதவள மேலாண்மை துறையின் முக்கிய கொள்கை விளக்க குறிப்பு
அதோபோல அவர்கள் எவ்வாறு பத்திரிக்கை குறிப்புகளை தயாரிக்கலாம் என்று வல்லுனர்களை கொண்டு சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட உள்ளது. மாவட்டங்களில் உள்ள குறைதீர்க்கும் பிரிவில் பணியாற்றும் அலுவலர்களுக்கும் மக்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பது பற்றிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு