சென்னை:இதுகுறித்துதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "செப்டம்பர் 10ஆம் தேதி காலை மற்றும் மாலையில் நடைபெறவுள்ள குரூப் 7-பி தேர்வுகளில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-3 (இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணிகள்) பதவிக்கான எழுத்துத் தேர்வு (கொள் குறிவகை) நடைபெற உள்ளது.
டிஎன்பிஎஸ்சி அறநிலையத்துறை செயல் அலுவலர் ஹால் டிக்கெட் வெளியீடு - chennai
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை 3 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை பணி டிஎன்பிஎஸ்சி ஹால் டிக்கெட் வெளியீடு
இந்தத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குறைந்த கரோனா... 2ஆண்டுகளுக்குப்பின் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்