தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் சார்ந்து நீதிமன்றங்களில் வழக்குகள் இருந்தாலும் பள்ளிக் கல்வித் துறையில்தான் அதிக அளவிலான வழக்குகள் வருகின்றன. தற்போதைய நிலவரப்படி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கலாம் எனத் தெரிகிறது.
பள்ளிக் கல்வித் துறையில் குவிந்துள்ள வழக்குகளைக் குறைக்க குழு! - பள்ளிக்கல்வித் துறையில் குவிந்துள்ள வழக்குகளை குறைக்க ஆணையர் தலைமையில் குழு
சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் குவிந்துள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் வழக்குகள் அதிகரிப்பதை கட்டுப்படுத்தவும் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை
இதுபோன்று வழக்குகள் குவிந்துள்ளதைத் தடுக்கவும் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காகப் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில், சட்ட நிபுணர்கள் 4 பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதையும் படிங்க: மாணவனை அடித்த ஆசிரியை: பள்ளிக்குப் பூட்டுபோட்டு போராட்டம்!
TAGGED:
Department of Education