சென்னை முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகளை கொண்டு அடர்வனத்தை மாநகராட்சி உருவாக்கி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட தலைமைச் செயலக பூங்காவில் மூன்று ஆயிரம் சதுர அடி பரப்பளவு நிலத்தில் சென்னை இன்னர்வீல் சங்கத்தின் சார்பாக கடந்த வருடம் செப்டம்பர் 16ஆம் தேதி 30 உள்நாட்டு வகையிலான 837 மரக்கன்றுகள் நடப்பட்டு அடர்வனம் உருவாக்கும் பணியை தொடங்கினார்கள்.