தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புத்தர் சிலை ஊர்வலம் நடத்த முயன்ற பெரியார் திகவினருக்கு அனுமதி மறுப்பு! - Periyar Dravidars to attempt to stage a Buddha statue

சென்னை: புத்தர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என பெரியார் திராவிடர் கழகத்தினருக்கு காவல் துறையினரின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பெரியார் திராவிடர்

By

Published : Sep 8, 2019, 11:21 PM IST

விநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து சென்னையில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் கடலில் கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டன. விநாயகர் ஊர்வலம் என்பது அரசியலுக்கான ஊர்வலம் என்று கூறி எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக புத்தர் சிலையை உருவாக்கி அதனை ஊர்வலமாகக் கொண்டு செல்ல பெரியார் திராவிடர் கழகத்தினர் அச்சிலையை திருவல்லிக்கேணி அருகே மீர்சாகிப்பேட்டையில் வைத்திருந்தனர்.

இந்நிலையில், புத்தர் சிலை ஊர்வலம் நடத்தப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் என்பதால் அதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதனைக் கண்டித்து பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சிலை வைக்கப்பட்ட பகுதிகளில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புத்தர் சிலை ஊர்வலம் நடத்த முயன்ற பெரியார் திராவிடர் கழகத்தினருக்கு அனுமதி மறுப்பு

பின்னர் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்த பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை மற்றும் பெரிய தெரு வழியாக ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்புடன் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details