தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெங்குவை தடுக்க கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை! - dengue prevention

சென்னை: பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க வேண்டும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவுரை வழங்கியுள்ளது.

டெங்கு

By

Published : Oct 7, 2019, 7:26 AM IST

Updated : Oct 7, 2019, 8:04 AM IST

டெங்கு பாதிப்புக்குக் காரணமான கொசு உற்பத்தியைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இப்போது, வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் கல்லூரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உயா் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் டெங்குவை தடுக்கும் முறை குறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

  • டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசு சுத்தமான நீரில்தான் உருவாகிறது. எனவே கல்லூரி வளாகத்திலுள்ள கட்டடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு அடைப்புகளை சுத்தம் செய்ய வேண்டும்.
  • கொசு உற்பத்தியாவதைத் தடுக்கும் வகையில் கல்லூரி வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில் பேராசிரியர் குழு இது தொடா்பான தொடர் ஆய்வையும் மேற்கொள்ள வேண்டும்.
  • அந்தந்தப் பகுதி சுகாதார அலுவலர்களின் உதவியோடு, மாணவா்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • டெங்கு பாதிப்பு, காய்ச்சலால் பாதிக்கப்படுபவா்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கும் கல்லூரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • கல்லூரியில் உள்ள மின்சாதனங்கள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து, அதனை சரி செய்ய வேண்டும்.
  • கல்லூரி வளாகத்தினை சுத்தமாக வைத்திருப்பதுடன், டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்களை ஒழிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
    தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் அறிவுரை
    தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் அறிவுரை

இதையும் படிங்க :டெங்கு ஒழிப்பு சிறப்பு முகாம் - சுகாதார பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

Last Updated : Oct 7, 2019, 8:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details