தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் அடுத்த 3 மாதத்திற்கு டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு!

Dengue: தமிழகத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்கு டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்து உள்ளார்.

dengue
தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு பேரணி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 1:50 PM IST

சென்னை:தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு வாரமாக அக்டோபர் 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொது சுகாதாரப்பணியாளர்கள் பங்கேற்றனர்.

இந்த பேரணியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எவ்வாறு மக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும், அதேபோல் அதற்கு பணியாளர்கள் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டன. பின், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், ‘பொது சுகாதாரத்துறை சார்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. டெங்கு பரிசோதனை முடிவுகளை விரைவாக கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 6 மணி நேரத்தில் டெங்கு பரிசோதனை முடிவுகளை வழங்க அனைத்து அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களுக்கு பொது சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேற்குதொடர்ச்சிமலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. டெங்கு பாதிப்பைக் கண்டறிவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த மூன்று மாதத்திற்கு டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. டெங்கு பாதிப்பு தமிழகத்தில் தற்போது அபாயகரமான நிலையில் இல்லை. அதேபோல் டெங்கு நோய் தொற்று பரவல் என்பது கட்டுக்குள் உள்ளது” என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “மழைக்காலம் தொடங்கும் போதே கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழைக்குப் பின்னர் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கொசுக்களினால் பரவும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரத் தொடங்கி உள்ளன.

இந்த நிலையில், அக்டோபர் மாதம் தொடங்கி 8 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், இந்த எட்டு நாட்களில் 273 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஜனவரியில் இருந்து தற்போது வரையிலும் 4,800 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நாளொன்றுக்கு 40 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் தமிழ்நாட்டில் 4 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்து உள்ளனர். தற்போது மருத்துவமனையில் 503 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்’ என்றார்.

இதையும் படிங்க:பொதுப்பாதையை ஆக்கிரமித்து மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details