தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்லவன் இல்லம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள்! - demonstration in chennai

சென்னை : ஊரடங்கு காலத்தில் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லவன் இல்லம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள்!
பல்லவன் இல்லம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள்!

By

Published : Aug 8, 2020, 2:58 PM IST

சென்னை மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் 'இந்தியாவை பாதுகாப்போம்' என்ற முழக்கத்தின் கீழ் சென்னை பல்லவன் இல்லம் முன்பாக இன்று (ஆகஸ்ட் 8) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளர்களின் வேலை நேரத்தைப் 12 மணி நேரமாக அதிகரிக்கக் கூடாது, மின்சார நிறுத்த சட்டத்தை கைவிட வேண்டும் சுற்றுச்சூழல் அமைப்பு அறிக்கை 2020 நிறைவேற்றக் கூடாது, கரோனா தாக்கத்தை மையமாக வைத்து நிலக்கரி சுரங்கங்கள் விண்வெளி அறிவியல் வங்கி ரயில்வே போன்றவற்றை தனியாருக்கு விற்கக் கூடாது, வேலைநீக்கம் சம்பள குறைப்பு போன்றவற்றை கைவிட வேண்டும், ஊரடங்கு காலத்திற்கும் முழு சம்பளத்தை வழங்கிட வேண்டும்.

செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் சம்பளத்தையே ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் அனைவருக்கும் வழங்க வேண்டும், மின்வாரியம், பால்வளம், போக்குவரத்து, வங்கி, ரயில்வே உள்ளிட்ட துறைகளில் நோய்த் தொற்றினால் ஒப்பந்த தொழிலாளர்கள் யாரேனும் இறந்திருந்தால் அவர்களது குடும்பங்களுக்கு 50 லட்சம் காப்பீட்டுத் தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐஎன்டியூசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, எல்பிஎஃப், எம்எல்எஃப், ஏஐசிசிடியூ, எஸ்டிடியூ ஆகிய அமைப்புகளின் சார்பில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details