சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் நேற்று (ஜூன் 14) மாலை காங்கிரஸ் கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் நாகராஜ், சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவர் எதிரே வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து நாகராஜ் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.