தாம்பரம் வட்டாட்சியர் சரவணன் அறிவுறுத்தலின் பெயரில் காஞ்சிபுரம் கிராம ஆய்வாளர்களின் உதவியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட துணைத்தலைவர் ரவி, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சேகர் ஆகியோரின் தலைமையில் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 80க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் - நிர்வாக அலுவலர் உதவியாளர் சங்கம்
சென்னை: கிராம நிர்வாக உதவியாளர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 80க்கும் மேற்பட்ட நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:28:45:1599037125-tn-che-06-demonstration-byvillageadministrationofficers-andassistants-visual-script-7208368-02092020141022-0209f-1599036022-16.jpg)
தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 80க்கும் மேற்பட்ட நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
அப்போது பெருங்களத்தூர் கிராம ஆய்வாளரின் உதவியாளர் சங்கர் ராஜ் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும், அவர் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.