சென்னை:Demolition: சென்னை அடையாறு ஊரூர் பகுதியில் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாத பள்ளிக் கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.
திருநெல்வேலியில் பள்ளிக் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் இறந்தனர். மேலும் 4 மாணவர்கள் காயமுற்றனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அண்ணா முதலமைச்சராக இருந்த போது கட்டப்பட்ட பழுதடைந்த பள்ளி கட்டடம் இடித்து அகற்றம் இதனையடுத்து, பழுதடைந்த கட்டடங்களை இடித்து அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
அதன்படி பழுதடைந்த கட்டடங்களை மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவின்பேரில் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் தலைமையில் 48 குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளி கட்டடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றன.
பழுதடைந்த பள்ளிக் கட்டடம் இடித்து அகற்றம் இந்தநிலையில், சென்னை அடையாறு ஊரூர் பகுதியில் அமைந்துள்ள அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழுக்கள் ஆய்வு நடத்தினர்.
அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறத்தில் அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது கட்டி தொடங்கப்பட்ட சத்துணவுக் கூடம் பயன்பாட்டில் இல்லாமல் பாழடைந்து, அதன் மேற்கூரை இடிந்து விழும் நிலையிலிருந்தது. மேலும் பயன்பாட்டில் இல்லாத கழிவறையும் அங்கு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அதனை உடனடியாக இடிக்க உத்தரவிட்டார். அதன்படி, பொதுப்பணித்துறையினர் இன்று அதனை இடித்தனர்.
இதையும் படிங்க: Verdict: 9 ஆண்டுகள் கழித்து வளர்ப்பு நாய்க்கு கிடைத்த நீதி!