தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 10,000 புதிய பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, பணி நியமனம் வழங்காமல் காத்திருப்பில் உள்ளனர். மேலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனைக் கண்டித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அருகில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் பின்னர் செய்தியாளர்களிடம் அதன் மாநிலச் செயலாளர் பாலா பேசுகையில், "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 10,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பாவிட்டால் நம்பர் 19ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம் நடத்தும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 10 விழுக்காடு போனஸ்: மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்