தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெல்டா மாவட்டங்களில் ஊரடங்கு நேரத்தில் எந்தெந்த பணிகள் செய்ய அனுமதி? - டெல்டா மாவட்டத்திற்கு ஊரடங்கு தளர்வு?

சென்னை: ஆரஞ்சு மண்டலமாக இருக்கும் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய பகுதிகளில் ஊரடங்கிலிருந்து தளர்வு அளிக்க அதிக வாய்ப்புள்ளது.

tamilnadu
tamilnadu

By

Published : May 2, 2020, 1:11 PM IST

கரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே, மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது, மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழ்நாடு அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் தமிழ்நாட்டில் கரோனா பரவல் மூன்றாம் கட்டத்தை நெருங்குவதைத் தடுக்க சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சி மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நான்கு நாள்கள் முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கரோனா பாதிப்பு அதிகமாகவுள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் ஏதுமில்லை. பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் சிவப்பு நிற மண்டலங்களாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மண்டலங்களாகவும், 1 மாவட்டம் பச்சை நிற மண்டலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

🟥 சிவப்பு நிற மண்டலங்கள்

வரிசை எண் மாவட்டங்கள்
1 சென்னை
2 மதுரை
3 நாமக்கல்
4 தஞ்சாவூர்
5 செங்கல்பட்டு
6 திருவள்ளூர்
7 திருப்பூர்
8 ராணிப்பேட்டை
9 விருதுநகர்
10 திருவாரூர்
11 வேலூர்
12 காஞ்சிபுரம்


🟧ஆரஞ்சு நிற மண்டலங்கள்

வரிசை எண் மாவட்டங்கள்
1. தேனி
2. தென்காசி
3. நாகப்பட்டினம்
4. திண்டுக்கல்
5. விழுப்புரம்
6. கோயம்புத்தூர்
7. கடலூர்
8. சேலம்
9. கரூர்
10. தூத்துக்குடி
11. திருச்சிராப்பள்ளி
12. திருப்பத்தூர்
13. கன்னியாகுமரி
14. திருவண்ணாமலை
15. ராமநாதபுரம்
16. திருநெல்வேலி
17. நீலகிரி
18. சிவகங்கை
19. பெரம்பலூர்
20. கள்ளக்குறிச்சி
21. அரியலூர்
22. ஈரோடு
23. புதுக்கோட்டை
24. தருமபுரி

🟩பச்சை நிற மண்டலங்கள்:

1 கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தைத் தவிர மற்ற மாவட்டங்கள் கரோனா வைரஸ் தொற்று உள்ள மாவட்டங்களாக அறியப்படுகின்றன. தற்போது கரோனா தொற்றிலிருந்து ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. கடந்த பதினைந்து நாள்களாக தொற்று ஏதும் இல்லாமல் காணப்படுகிறது. எனவே நோய் தொற்று முழுவதும் குறைந்து பச்சை மண்டலமாக தளர்த்துவதை எதிர்பார்க்கலாம்.

தற்போது, தமிழ்நாட்டில் ஊரடங்குத் தளர்வுகளின் போது, எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், "ஊரகப் பகுதிகளில் நீர் நிலைகளை தூர்வாருதல், நீர்ப்பாசனம், அணை பாதுகாப்பு, சாலை, பாலங்கள், செங்கல் சூளை போன்ற பணிகளை செய்யலாம். மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் கட்டுமானம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம்".

குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், மின்சாரம் தொடர்பான பணிகளை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 100 நாள் வேலைத் திட்டத்தில் கட்டுப்பாடுகளுடன் வேலைக்கு அமர்த்தவும். மே 3ஆம் தேதிக்கு பிறகு மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் ஊரடங்கில் எந்தெந்த பணிகள் செய்ய அனுமதி வழங்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:தொடங்கியது அமைச்சரவைக் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details