தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை; திமுக மீண்டும் நிலைநிறுத்தும் - வைகோ! - பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை

சென்னை: கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு பெயரை மாற்றி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்னும் பழைய பெயரை வைக்க தவறினால், மே மாதம் பொறுப்பு ஏற்கும் திமுக தந்தை பெரியாரின் பெயரை மீண்டும் நிலைநிறுத்தும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Vaiko
Vaiko

By

Published : Apr 13, 2021, 4:16 PM IST

சென்னை பார்க் டவுன் பகுதியில் இருந்து பூந்தமல்லியை இணைக்கும் பெரியார் ஈ.வெ.ரா. சாலையில், கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆவணங்களில் இந்த சாலை பெரியார் ஈவெரா சாலை என்றும், நெடுஞ்சாலை துறை இணையதளத்தில் கிராண்ட் டிரங்க் ரோடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை ரிப்பன் மாளிகை அருகே, நெடுஞ்சாலைத் துறையினர், கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று பெயர் பொறித்த பலகையை, புதிதாக நாட்டி உள்ளனர். 1979 ஆம் ஆண்டு, தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவை, ஓராண்டு தொடர் விழாவாக எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.மு.க. அரசு கொண்டாடியது.

அப்போது, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை ‘‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’’ என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் பெயர் மாற்றம் செய்து ஆணை பிறப்பித்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அரசு, நெடுஞ்சாலைத் துறை இணைய தளத்தில், தந்தை பெரியார் பெயரை நீக்கிவிட்டு ‘‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு’’ என்று பெயர் மாற்றம் செய்து உள்ளது.

ஏற்கனவே, சென்னை வான்ஊர்தி நிலையத்தில் இருந்து, காமராசர் அண்ணா பெயரை நீக்கியதையும் அரசு கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவாக, தற்போது இந்த மாற்றம் நடந்துள்ளது.

எனவே, இந்த பெயர் மாற்றத்தை உடனே நீக்க வேண்டும்; ‘‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’’ என்ற பெயர் தொடர வேண்டும். தவறினால், மே மாதம் பொறுப்பு ஏற்கும் திமுக ஆட்சி தந்தை பெரியாரின் பெயரை மீண்டும் நிலைநிறுத்தும்" என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details