தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருணாநிதி நினைவிட கட்டுமான பணியில் தொய்வு? - அமைச்சர் விளக்கம்... - மெரினா கடற்கரை3

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் கருணாநிதி நினைவிட கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டதாகவும், தொடர்ந்து பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

By

Published : Dec 2, 2022, 6:41 AM IST

மெரினா கடற்கரை(சென்னை): மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் ஜூன் 3-ஆம் கொண்டாடப்படுகிற்து. சென்னை மெரினாகடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகில் 2 புள்ளி 21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் மதிப்பில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

இதையடுத்து நினைவிட கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கட்டுமான பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கருணாநிதியின் நினைவிட கட்டுமான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், கூடிய விரைவில் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கட்டுமான பணிகளில் சிறிய அளவில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் கட்டுமான பணிகள் நிறைவடையும் என்றார்.

கலைஞர் நினைவிட கட்டுமான பணிகள் குறித்து அமைச்சர் தகவல்

2023 ஆம் ஆண்டு ஜூன் 3ம் தேதி கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பாக பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:முதல் நாளில் 506 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த இங்கிலாந்து அணி:

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details