சென்னை:டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 29ஆவது பட்டமளிப்பு விழா வேலப்பன் சாவடியில் உள்ள கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்கிய இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் மூன்றாயிரத்து 450 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதையடுத்து அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், "முனைவர் மற்றும் பட்ட மேல் படிப்பு பட்டங்கள் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.