தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு - டின்பிஎஸ்சி தேர்வு முடுவுகள்

நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தள்ளிப்போகும் டின்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்
தள்ளிப்போகும் டின்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்

By

Published : Sep 29, 2022, 8:18 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2, 2ஏ, 4 தேர்வுகளுக்கான முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார் பதிவாளர் நிலை-2, நகராட்சி ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் உள்பட குரூப்-2, 2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 208 இடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 21ஆம் தேதி நடந்தது.

இந்த தேர்வை எழுத 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பிருந்த நிலையில், 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் தேர்வை எழுதினர். அதற்கான தேர்வு முடிவு ஏற்கனவே வெளியிட்டு இருந்த அறிவிப்பின்படி, ஜூன் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பில், அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியிட வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 7 ஆம் தேதி ஆயிரத்து 301 இடங்களுக்கு எழுத்துத் தேர்வு கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் மாதத்தில் தான் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் ரூ.174.48 கோடி மதிப்பீட்டில் வெள்ளத் தடுப்புப் பணிகள்... முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு...

ABOUT THE AUTHOR

...view details