சென்னை:திண்டிவனத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தின்போது குப்பையிலும் ஊழல் செய்துள்ளதாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது கனிமொழி குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழ்நாடு அரசு குறித்து அவதூறாக பேசியதாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி கனிமொழி ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. மேலும் வழக்கை ரத்து செய்ய கோரிய மனு மீதான விசாரணை நீதிபதி நிர்மல்குமார் முன்பு நடைபெற்று வந்தது.