தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து - நீதிபதி செல்வகுமார்

கடந்த ஆட்சியில் பத்திரிகையாளர், அரசியல் கட்சி தலைவர் மீது போடப்பட்ட 50 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து
பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து

By

Published : Oct 8, 2021, 3:53 PM IST

கடந்த 2011 முதல் 2021 ஆண்டு வரை அதிமுக அரசை விமர்சித்ததற்காக பத்திரிகையாளர், அரசியல் கட்சி தலைவர்கள் மீது சுமார் 100க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

முன்னாள் முதலமைச்சர், முன்னாள் அமைச்சர்கள் சார்பாக பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் நிலுவையில் உள்ள அவதூறு வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகர குற்றவியல் தலைமை வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கான அரசாணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி செல்வகுமார், அரசியல் தலைவர்களான மார்க்சிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், டைம்ஸ் ஆப் இந்தியா, தி இந்து, தினமலர், தினகரன், முரசொலி மீது தொடரப்பட்ட 50 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க :தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details