சென்னை: சர்கார் பட விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான சர்கார் திரைப்படத்தில் தமிழ்நாடு அரசையும், அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் அரசின் திட்டங்களை தவறாக குறிப்பிடுவதாக படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் தேவராஜன் என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில் முருகதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு ஏற்கனவே முன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், எனக்கு எதிரான புகார் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அளிக்கபட்டது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவில், திரைப்படம் தணிக்கை முடிந்த பிறகுதான் வெளியிடப்பட்டுள்ளது. தணிக்கை முடிந்த திரைப்படம் குறித்து தனி நபர் அல்லது அரசு கேள்வி எழுப்ப அல்லது வழக்கு பதிவு செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அரசியலமைப்பு வழங்கிய பேச்சுரிமைக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.
சர்கார் விவகாரம்: ஏ.ஆர். முருகதாஸ் மீதான வழக்கு ரத்து - சர்கார் விவகாரம்
தணிக்கை முடிந்த திரைப்படம் குறித்து தனி நபர் அல்லது அரசு கேள்வி எழுப்ப அல்லது வழக்கு பதிவு செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அரசியலமைப்பு வழங்கிய பேச்சுரிமைக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.
Defamation case quashed against AR murugadass, MHC