தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேதா இல்லம்: தீபக் வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்! - chennai high court news

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபக் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

hc
hc

By

Published : Aug 12, 2020, 3:33 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக்குவதற்கு, 24 சதுர அடி பரப்பளவு கொண்ட வேதா இல்லம் அமைந்துள்ள இடத்திற்கு 68 கோடி ரூபாய் இழப்பீடு நிர்ணயித்து அரசு கையகப்படுத்த உத்தரவும் பிறப்பித்திருந்தது. எனவே, 68 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தி வேதா நிலையம் இல்லத்தை அரசுடைமையாக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால், கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீபக் தரப்பிலும், இழப்பீடு நிர்ணயத்தை எதிர்த்து தீபா தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த இரு வழக்குகளையும் இரண்டு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற தனி நீதிபதி பரிந்துரைத்தார்.

இந்நிலையில், தீபக் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட் 12) விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு பட்டியலிடவில்லை என சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து, தீபா வழக்கு பட்டியலிடப்பட்ட பின் இரண்டு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்கலாம் என கூறிய நீதிபதிகள், தீபக் தாக்கல் செய்த வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details