தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே நாளில் 134 கோடி ரூபாய்க்கு பத்திரப்பதிவு - அமைச்சர் மூர்த்தி தகவல் - பத்திரப்பதிவு

கடந்த வாரத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 134 கோடி ரூபாய்க்கு பத்திரப்பதிவு நடந்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.

minister moorthi
அமைச்சர் மூர்த்தி

By

Published : Jul 27, 2021, 4:00 PM IST

சென்னை:சாந்தோமில் உள்ள பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில் மாவட்ட பத்திரப்பதிவர்கள் ஆய்வு கூட்டம் இன்று (ஜூலை27) நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு முதன்மை செயலாளர் ஜோதி நிர்மலா, பத்திரப்பதிவு தலைவர் சிவன் அருள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “மாவட்ட பத்திர பதிவாளர்கள் கூட்டத்தில், பத்திர பதிவு முறையாக நடந்துள்ளதா எந்தந்த இடங்களில் தவறான பதிவுகள் நடந்திருக்கின்றன என்பதை ஆய்வு செய்துள்ளோம். தவறான பத்திரங்களை எழுதி, பதிவு செய்யும் பத்திர எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இரண்டு மாத காலத்தில் படிப்படியாக பத்திரப் பதிவுத்துறை சீர் செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் தவறான போலி பத்திரப்பதிவுகள் மற்றும் ஆள் மாறாட்டம் நடைபெற்றுள்ளது. அது தொடர்பான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உடனடி நடவடிக்கை

பத்திரப்பதிவு சேவை மையத்திற்கு வந்த புகார்களில், உண்மைத்தன்மையுள்ள புகார்கள் மீது 1 மணி நேரத்திற்குள் தீர்வு காணப்பட்டுள்ளது. இதுவரை 5 ஆயிரம் புகர்களில் 2 ஆயிரத்து 500 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டு மதிப்பீட்டின் (guide line value) அடிப்படையில் பத்திரப் பதிவு நடைபெறுகிறது.

கடந்த வாரத்தில் ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 134 கோடி ரூபாய்க்கு பத்திர பதிவு நடைபெற்றுள்ளது. வருங்காலத்தில் இந்தத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜிஎஸ்டி நிலுவைத் தொகை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

சொல்லாததையும் செய்யும் அரசு!

மிக விரைவில் ஒன்றிய அரசு நிலுவைத்தொகையை வழங்கும் என எதிர்பார்க்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியதை 10விழுக்காடு கூட நிறைவேற்றியிருக்க மாட்டார்கள்.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளாக சொல்லாததையும் தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றையும் நிறைவேற்றி வருகிறார். அரசை 5 லட்சம் கோடி கடனில் விட்டுச்சென்ற அதிமுகவிற்கு போராட்டம் குறித்து பேச தகுதி இல்லை” என்றார்.

இதையும் படிங்க:பத்திரப்பதிவுகளில் கூடுதல் தொகை வாங்கினால் நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details