தமிழ்நாடு

tamil nadu

போலீசார் கூடுதல் எரிபொருள் பயன்படுத்தினால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்... ஏடிஜிபி எச்சரிக்கை...

காவல்துறை வாகனங்களில் கூடுதலாக எரிபொருளை பயன்படுத்தினால் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்று கூடுதல் டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

By

Published : Sep 1, 2022, 10:46 AM IST

Published : Sep 1, 2022, 10:46 AM IST

போலீசார் கூடுதல் எரிபொருள் பயன்படுத்தினால் சம்பளம் பிடித்தம் ஏடிஜிபி எச்சரிக்கை
போலீசார் கூடுதல் எரிபொருள் பயன்படுத்தினால் சம்பளம் பிடித்தம் ஏடிஜிபி எச்சரிக்கை

சென்னை:தமிழ்நாடு காவல்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்களை பராமரிக்கும் பிரிவின் ஏடிஜிபி வெங்கடராமன் அனைத்து காவல் ஆணையர்கள், எஸ்பிக்கள் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், "எரிபொருள் உயர்வு நெருக்கடிகளை கருத்திற்கொண்டு, காவல்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப பெட்ரோல், மற்றும் டீசல் அளவை அறிவுறுத்தியபடி நிர்ணயித்து கொள்ளுமாறு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அரசு நிர்ணயம் செய்துள்ள அளவை விட அதிக எரிபொருள் பயன்படுத்தினால் அவ்வாறு பயன்படுத்திய அதிக எரிபொருளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.அதிகமாக பயன்படுத்தப்பட்ட எரிபொருளுக்கு சம்பந்தப்பட்ட வாகனம் பயன்படுத்தும் அலுவலரிடமிருந்து பணம் பிடித்தம் செய்யப்படும்.

இதனால் காவல்துறை வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வரம்பிற்கு மிகாமல் திட்டமிட்டு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும் படி அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்பை விட எக்காரணத்தை கொண்டும் கூடுதலாக எரிபொருள் பயன்படுத்தக்கூடாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு - இது யாருக்கான ஸ்கெட்ச்?

ABOUT THE AUTHOR

...view details