தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநகரில் குறையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை - சென்னை மாநகராட்சி! - சென்னை கரோனா நிலவரம்

சென்னை: கரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்படுவதால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 24ஆக குறைந்துள்ளது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Decreasing number of restricted areas in the city - Chennai Corporation!
Decreasing number of restricted areas in the city - Chennai Corporation!

By

Published : Aug 4, 2020, 8:00 PM IST

கரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் வைரஸ் பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, மக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, மருத்துவ முகாம்கள் நடத்துவது என மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளைக் கையாண்டுவருகிறது.

மேலும் பரவலை தடுக்கும் வகையில், முதலில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் முழு தெருவையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்திருந்தது. இது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதால். ஒரு தெருவில் மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தொற்று இருந்தால் தெருவை தனிமைப்படுத்தி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்து வருகிறது.

தற்போது சென்னையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதால், கட்டுப்பாட்டு பகுதிகளும் குறைந்து வருகிறது. மேலும், மாநகரின் ஹாட்ஸ்பாட் என்று சொல்லிகொண்டிருந்த வடசென்னை பகுதிகளில், தற்போது ஒரு கட்டுப்படுத்த பகுதிகள் கூட இல்லை. அதன்படி, சென்னையில் ஜூலை 2 ஆம் தேதி 56ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், தற்போது 24ஆக குறைந்துள்ளது.

இதன் மண்டல வரையான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது அதன்படி,

‌திரு.வி.க நகர் - 1

‌அம்பத்தூர் - 5

‌அண்ணா நகர் - 11

‌தேனாம்பேட்டை - 1

‌கோடம்பாக்கம் - 5

‌வளசரவாக்கம் - 1

மேலும் 14 நாட்களுக்கு மேலாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், நோய் தொற்று ஏற்படவில்லை என்றால் அது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details