சென்னையில் கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த கரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மீண்டும் பெருமளவு அதிகரித்து வருகிறது.
சென்னையில் கரோனா தாக்கம் குறைந்ததையடுத்து வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானங்களில் வருகை பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் சென்னையில் கரோனா தாக்கம் பெருமளவு அதிகரித்து வருவதால் சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டன.
சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானங்களில் நாள்ளொன்றுக்கு வருகை பயணிகள் எண்ணிக்கை சுமாா் ஏழு ஆயிரத்து 500 க்கும் அதிகமாக இருந்தது. அதேபோல் சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 66 ஆக இருந்தது. ஆனால் இன்று(அக்.03) ஒரே நாளில் அது வெகுவாக குறைந்து, 57 உள்நாட்டு விமானங்கள் மட்டுமே சென்னையில் வந்து தரையிறங்குகின்றன. அதில் சுமாா் 5 ஆயிரத்து 200 போ் மட்டுமே சென்னைக்கு வருகின்றனா்.