தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணலி, சோழிங்கநல்லூரில் கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பெறுபவர்கள் குறைவு - மாநகராட்சி தகவல் - சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: கரோனா தொற்றின் காரணமாக மணலி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 100க்கும் கீழ், குறைவாக உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

or
rcorc

By

Published : Nov 8, 2020, 12:38 PM IST

சென்னையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அண்ணா நகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,000ஐ கடந்துள்ளது. அதேபோல் கோடம்பாக்கத்தில் 22,000ஐ நெருங்கி வருகிறது. கரோனா பரவலைக் குறைப்பதற்கு அப்பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.

கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோரின் விழுக்காடு 90ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மொத்தமாக 2,04,258 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,94,616 நபர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 5 ஆயிரத்து 931 நபர்கள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 3 ஆயிரத்து 711 நபர்கள் கரோனா தொற்றினால் உயிரிழந்தனர்.

இந்த தொற்றின் காரணமாக மண்டல வாரியாக சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,

கோடம்பாக்கம் - 374 பேர்;
அண்ணா நகர் - 440 பேர் ;
ராயபுரம் - 273 பேர்;
தேனாம்பேட்டை - 286 பேர்;
தண்டையார்பேட்டை - 220 பேர்;
திரு.வி.க. நகர் - 334 பேர்;
அடையாறு - 274 பேர்;
வளசரவாக்கம் - 232 பேர்;
அம்பத்தூர் - 292 பேர்;
திருவொற்றியூர் - 157 பேர்;
மாதவரம் - 155 பேர்;
சோழிங்கநல்லூர் - 95 பேர்;
பெருங்குடி - 195 பேர்;
ஆலந்தூர் - 232 பேர்;
மணலி - 60 பேர்;

ABOUT THE AUTHOR

...view details