பள்ளிக்கல்வித்துறையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு மாற்றங்களை அரசுத் தேர்வுத் துறை செய்து வருகிறது. அதன்படி 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மதிப்பெண்கள் 1200 மதிப்பெண்களிலிருந்து 600 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டதால்மூன்று மணிநேரமாக இருந்த தேர்வு நேரம்,இரண்டரை மணிநேரமாக குறைக்கப்பட்டது.
இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கருத்தில் கொண்ட தேர்வுத்துறை தேர்வு எழுதும் நேரத்தை மீண்டும் மூன்று மணி நேரமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வானது, மதியம் ஒரு மணி வரை நடைபெறும். கூடுதலாக வழங்கும் 15நிமிடம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.