முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவோடு 100 நாள்கள் நிறைவடைகிறது. ஆகஸ்ட் 15 பிறக்கும் அதே நள்ளிரவில், இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகின்றன. எனவே இந்தத் தொடர் நிகழ்வுகளை வரலாற்றில் பதிவு செய்யக்கூடிய விழாவாக கொண்டாட அரசு முடிவெடித்திருப்பதாகத் தெரிகிறது.
அதன்படி, ஆகஸ்ட் 15 பிறக்கும் நள்ளிரவு 12 மணியளவில் சட்டப்பேரவையில் 75ஆவது விடுதலை நாள் விழா கொண்டாட அரசு தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசு முழு வீச்சில் செய்துவருகிறது. இவ்விழாவில் பங்கேற்க தமிழ்நாடு ஆளுநர் அழைக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.