தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் - அக்டோபர் 4ஆம் தேதி வழங்க முடிவு - 10th student

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அக்டோபர் 4ஆம் தேதி முதல் பள்ளிகளில் வழங்கப்படும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

10-ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்
10-ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்

By

Published : Oct 1, 2021, 6:54 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இல்லாமல் பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் 'தேர்ச்சி' என மட்டும் பதிவு செய்து வழங்கப்பட்டது.

இந்தநிலையில் அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'பத்தாம் வகுப்பு மார்ச் 2021 பொதுத்தேர்வு தொடர்பான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை, அனைத்து பள்ளி மாணவர்களும் அக்டோபர் 4ஆம் தேதி, காலை 10 மணி முதல் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றவேண்டும்

மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள பள்ளிக்கு வருகை தரும் மாணவர்கள், பெற்றோர் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள பள்ளிக்கு வருகை புரியும் மாணவர்கள், பெற்றோர் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும்' என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:'உயர் பணிகளில் இருந்தாலும் மண்ணையும் தாய்மாெழியையும் மறக்காதீர்!'

ABOUT THE AUTHOR

...view details