சென்னை: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கடந்த நவ. 9ஆம் தேதி தொடங்கிய இப்பணிகள் வரும் டிச.8ஆம் தேதியுடன் முடிவடைகின்றன.
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வரைவு வாக்காளா் பட்டியலின் அடிப்படையில், தமிழ்நாட்டில் இப்போது 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் ஆண்கள் 3 கோடியே 3 லட்சத்து 95 ஆயிரத்து 103 பேரும், பெண்கள் 3 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 321 பேரும் மற்றும் மூன்றாம் பாலினத்தவா் 7 ஆயிரத்து 758 பேரும் உள்ளனா்.
வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய கடந்த மாதம் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி அமைக்கும் இடங்களில், சிறப்பு முகாம்கள் நடந்தன. இந்த சிறப்பு முகாமில் 17,02,689 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்வதற்கு வரும் டிச.8-ம் தேதியுடன் முடிவடைகிறது.