தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புறக்கணிக்கப்படுகிறதா அம்மா உணவகங்கள்? சட்டப்பேரவையில் சூடான விவாதம்! - அம்மா உணவகம்

ஜெயலலிதாவால் துவங்கப்பட்ட அம்மா உணவகங்கள் புறக்கணிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 30, 2023, 2:16 PM IST

சென்னை:அம்மா உணவகம் திட்டத்தை முடக்க மாட்டோம் என்று பலமுறை திமுக அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும் மூன்று நிதிநிலை அறிக்கையிலும் அம்மா உணவகத்திற்கு கூடுதலாக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அம்மா உணவகங்களில் எங்கு தரமான சுவையான உணவுகள் வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பிறகு பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, அனைத்து இடங்களிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் மூடவில்லை அரசியலாக வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் தொடர்ச்சியாக அது குறித்து பேசி வருகிறீர்கள் என குற்றம் சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அம்மா உணவகத்தை நாடி வரக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று இதற்கு அங்கு தரமான சுவையான உணவுகள் தயார் செய்வதற்கு பொருட்கள் இல்லை என்பதே காரணம் எனவும் குற்றம் சாட்டினார்.

அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், அம்மா உணவகத்தில் உணவு தரமாக வழங்கப்படவில்லை சுவையாக தயாரிக்கப்படவில்லை என்று பொதுவாக எதிர்க்கட்சித் தலைவர் குறை கூறுகிறார். எந்த இடத்தில் இது போன்ற செயல் நடக்கிறது என்று ஆதாரத்துடன் கூறினால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி- எங்கு இது போன்ற செயல் நடக்கிறது என்று ஆய்வு செய்து அதை நீங்கள் தான் சீர் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எங்கு நடைபெறுகிறது என்று ஆதாரத்துடன் தெரிவித்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மா உணவகங்களில் சீராக உணவகங்கள் வழங்கவில்லை அம்மா உணவகங்கள் மூடப்படுகிறது என்று சிலர் திட்டமிட்டு இதனை பரப்புவதாக குற்றம் சாட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details