சென்னை:மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் கடந்த வாரம் இருதினங்களாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகினார்.
ஓ. பன்னீர் செல்வத்தின் விசாரணையுடன் தனது விசாரணையை நிறைவு செய்ததாக சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு - சசிகலா தரப்பு விசாரணை நிறைவு - ஜெயலலிதா இறப்பு தொடர்பான வழக்கு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணையை நிறைவு செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா இறப்பு தொடர்பான வழக்கு
இதுதொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு சசிகலா தரப்பு, குறுக்கு விசாரணையை நிறைவு செய்ததாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல் தெரிவித்தார். ஏற்கெனவே ஆஜரான மருத்துவர்களிடம் சில விளக்கங்களை தெளிவுபடுத்த வேண்டியிருப்பதால் வரும் 5, 6, 7ஆகிய தேதிகளில் அப்போலோ மருத்துவர்களிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்துகிறது.
இதையும் படிங்க:'இரக்கமின்றி அழுத்தம் கொடுத்தார் சிவகார்த்திகேயன்'- ஞானவேல் ராஜா