தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவரான கத்திப்பாரா ஜெனார்த்தனன் (73) மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். இது குறித்துபாஜக மாநில தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கத்திப்பாரா ஜெனார்த்தனன்மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.
கத்திப்பாரா ஜெனார்த்தனன் மறைவு:பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இரங்கல் - கத்திப்பாரா ஜனார்த்தனம் மறைவு
சென்னை: கத்திப்பாரா ஜெனார்த்தனன் மறைவிற்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் எல்.முருகன்
அரசியல் பாரபட்சம் இன்றி அனைத்து இயக்கத் தலைவர்களோடும் அன்பு பாராட்டி, மக்கள் தொண்டு செய்யக்கூடிய தலைவர் கத்திபாரா ஜெனார்த்தனன், அவரின் மறைவு நமக்கெல்லாம் பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது கட்சியினருக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது சார்பிலும், தமிழக பாஜக சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மன்னர் மன்னனின் இழப்பு தமிழன்னைக்கு பேரிழப்பு' - திருமாவளவன்