தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் மரணம்: உடலை ஒப்படைக்க லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளர் மீது வழக்கு - உடலை ஒப்படைக்க லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளர்

கரோனா பாதிப்பால் மரணம் அடைந்தவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க ரூ.11 ஆயிரம் லஞ்சம் பெற்ற சுகாதார ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

bribe
bribe

By

Published : Nov 2, 2021, 3:51 PM IST

சென்னை: நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் இன்பசேகரன். இவர் கடந்த மார்ச் மாதம் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், மரணம் அடைந்தார்.

இவரது உடலை அரசு நிலையான வழிகாட்டுதல் முறைப்படி ஒப்படைக்க வேண்டும் என்றால் ரூ.11 ஆயிரம் செலுத்த வேண்டுமென மூவரசம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் தசரதன், மறைந்த இன்பசேகரனின் மகன் பாலசுப்பிரமணியிடம் தெரிவித்துள்ளார்.

செல்போன் பரிவர்த்தனையில் சென்ற லஞ்சத்தொகை

இதனை நம்பிய பாலசுப்பிரமணி, தனது உறவினர் செல்போன் மூலம் ரூ. 11 ஆயிரத்தை தசரதன் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார். பின்னர் தனது நண்பர்களிடம் இதுதொடர்பாக விசாரணை செய்தபோது, உடலை ஒப்படைப்பதற்கு எந்தவித கட்டணமும் அரசு நிர்ணயம் செய்யவில்லை எனத் தெரிந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து தனது தந்தையின் உடலை வழங்க சுகாதார ஆய்வாளர் தசரதன் லஞ்சமாகப் பணம் வாங்கியது தொடர்பாக, பாலசுப்பிரமணி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அனுமதியோடு, சுகாதார ஆய்வாளர் தசரதன் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே கரோனாவால் உயிரிழந்த அய்யப்பந்தாங்கலைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் உடலை ஒப்படைப்பதற்கு, உறவினர்களிடம் ரூ.19 ஆயிரம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சுகாதார ஆய்வாளர் தசரதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கும் வைரல் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details