தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Corporation Tax: சென்னை மாநகராட்சி சொத்து வரியில் தள்ளுபடி - காலக்கெடு நீட்டிப்பு - சென்னை மாநகராட்சி சொத்து வரி

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியினை செலுத்தி ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை பெறுவதற்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

Corporation Tax
Corporation Tax

By

Published : Apr 17, 2023, 9:01 PM IST

சென்னை:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் சொத்து உரிமையாளர்கள் வருடத்திற்கு இரண்டு முறை சொத்து வரிகளை செலுத்த வேண்டும். இந்த சொத்து வரிக்கு மாநகராட்சி நிதி வரவில் மிகப்பெரிய பங்கு உண்டு. இதனை வசூலிக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், குரல் ஒலி அழைப்புகள், கட் செவ்வி தகவல் அனுப்புதல் (Whats app) பெருநகர சென்னை மாநகராட்சி நிறுவியுள்ள அறிவிப்பு பலகைகளில் சொத்துவரி செலுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு செய்தி வெளியிடுதல், திரையரங்குகளில் சொத்துவரி தொடர்பாக விழிப்புணர்வு படம் ஒளிப்பரப்புதல், குப்பை அகற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 வழங்கப்பட்ட திருத்தத்தின்படி, அரையாண்டுக்கான சொத்துவரியினை முதல் பதினைந்து நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, 5 சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக ரூ.5,000/- வரை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஏப்ரல்-1ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை 4,89,794 சொத்து உரிமையாளர்கள் ஊக்கத் தொகை பெற்றுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட காலத்தில் ரூ.290.62 கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக மாநகராட்சி இதுவரை வழங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு, தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சிகள் சட்டம் 1998-க்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 13 ஏப்ரல் 2023 முதல் தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சிகள் விதிகள் 2023 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023-24ஆம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியினை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத் தொகையினை பெற்றிடுமாறும், சென்னை மாநகரத்திற்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க: சீர்காழி சட்டநாதர் கோயிலில் 22 ஐம்பொன் சிலைகள், 462 செப்பேடுகள் கண்டெடுப்பு!

ABOUT THE AUTHOR

...view details