சென்னை:சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் இன்று (மார்ச் 23) பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், ஆதாரை இணைக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி (TNPSC) கூறியதால், குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு கிராமப்புற மாணவர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை என்றும், விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைவதால் அதை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "ஒரே விண்ணப்பதாரர் இரண்டு முறை விண்ணப்பிக்கக்கூடாது என்ற நடைமுறை 2020ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. 2020இல் கொண்டு வரப்பட்டாலும், நீதிமன்ற வழக்குகளால் இப்போது தான் அமலுக்கு வந்திருக்கிறது" என்று கூறினார்.