சென்னை ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட ஆவடி ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கிராசிங்கை, பசு மாடு ஒன்று கடக்க முயன்றது. அப்போது அங்கு வந்த விரைவு ரயில் ஒன்று அந்த பசுமாட்டின் மீது மோதியது. இதில் பசு மாடு சிறிது தூரம் வீசிப்பட்டு உயிரிழந்தது.
ரயிலில் அடிப்பட்டு இறந்த பசு: ரயில் நிலையம் அருகிலே எரித்த ஊழியர்கள் - ஆவடி ரயிலில் அடிப்பட்டு இறந்த பசு
சென்னை: ரயிலில் அடிபட்டு இறந்த பசுவை ரயில்நிலையம் அருகிலேயே ஊழியர்கள் தீ வைத்து எரித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
![ரயிலில் அடிப்பட்டு இறந்த பசு: ரயில் நிலையம் அருகிலே எரித்த ஊழியர்கள் cow](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5314568-622-5314568-1575874972331.jpg)
cow
ரயிலில் அடிப்பட்டு இறந்த பசு
இதையடுத்து, அந்த பசுமாட்டை ரயில்வே ஊழியர்கள் ஆவடி ரயில் நிலையம் நடைபாதை அருகிலேயே தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் கடுமையான நச்சுப் புகை சூழ்ந்திருந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்களும் பத்திரிக்கையாளர்களும் கேள்வியெழுப்பினர். ஆனால் அதற்கு செவி சாய்க்காத ஊழியர்கள் பசுவை எரித்துக்கொண்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு நிலவியது.