தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பத்து நாள் அரசுமுறைப் பயணமாக இன்று காலை அமெரிக்கா புறப்பட்டார். அவருடன் அரசு உயர் அலுவலர்களும் சென்றுள்ளனர்.
அமெரிக்காவின் சிகாகோ நகரத்திற்குச் செல்லும் அவர், நாளை அங்கு நடைபெறும் குழந்தைகள் தின விழாவில் கலந்துகொள்கிறார்.
அதனையடுத்து வாஷிங்டன் டிசி, நியூயார்க் நகரங்களுக்குச் செல்லும் அவர், அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் நவம்பர் 17ஆம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார்.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ஓபிஎஸ் அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக பசுமைவழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில், ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து வாழ்த்து பெற்றார்.