சென்னை: "ஆண்டுதோறும் பெரியளவிலான புயலையும், மழைகளையும் சென்னை சில ஆண்டுகளாகச் சந்தித்துவருகின்றது. இனிவரும் நாள்களில் வங்காள விரிகுடாவில் அடுத்தடுத்த புயல் உருவாகவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், நிவர் புயலுக்கு முன்பே சென்னை துறைமுகத்திலுள்ள வானிலை ஆய்வு ரேடார் பழுதடைந்தது.
இதனால் ரேடார் கருவியிலிருந்து புயலைத் துல்லியமாக கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்கும்பொருட்டு காரைக்கால், ஸ்ரீஹரிகோட்டா ரேடார்களின் உதவிகொண்டு சென்னையின் வானிலை கணிக்கப்பட்டுவருகிறது.
ஆனால், நிவர் புயலால் காரைக்காலிருந்து கிடைக்கும் வானிலைத் தகவல்களையும் வானிலை ஆய்வு மையம் பதிவிடாமல் இருந்துவருகிறது. அதுமட்டுமின்றி, சென்னை துறைமுகத்தில் பழுதடைந்துள்ள ரேடாரை சீரமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையிலேயே உள்ளன.