சென்னை:பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் மே ஒன்றாம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், ’தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 18 ஆயிரத்து 445 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 41 நபர்களுக்கும், வெளிநாட்டில் இருந்து வந்த நான்கு நபர்களுக்கும் டெல்லியில் இருந்து வந்த இரண்டு நபர்களுக்கும் என 47 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 50 லட்சத்து 9 ஆயிரத்து 633 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் 34 லட்சத்து 53 ஆயிரத்து 979 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 514 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் குணமடைந்த 46 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 440 என அதிகரித்துள்ளது.
சென்னையில் 25 நபர்களுக்கும்; செங்கல்பட்டில் நான்கு நபர்களுக்கும்; கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு நபர்களுக்கும்; கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர்களுக்கும்; வெளியே நாட்டில் இருந்து விமானத்தில் மூலம் வந்த நான்கு பயணிகளுக்கும்; உள்நாட்டு விமானத்தில் மூலம் அந்த ஒருவருக்கும் என 47 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் மேலும் ஒருவருக்கு கரோனா - பாதிப்பு எண்ணிக்கை 198ஆக உயர்வு