தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆலோசகராக தாவிடர் நியமனம் - தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆலோசகர்

தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு ஆலோசகராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் பி.டபுள்யூ.சி. தாவிடரை நியமனம்செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தாவிடர்
தாவிடர்

By

Published : Aug 16, 2021, 9:00 AM IST

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில், "மின்-நிர்வாகத்தை ஊக்குவிப்பதன் மூலமும், ஆன்லைன் சேவையின் மூலம் கணிசமான அளவு அரசின் மேம்பட்டசேவைகளை வழங்குவதன் மூலமும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை உறுதிசெய்ய இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் செய்யும்.

எங்கிருந்தும் ஆன்லைன் திறந்த அணுகல் செயல்படுத்தப்படும். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் சேவைகள் கிடைக்கின்றன என்பது உறுதிப்படுத்தப்படும். இது அரசின் செயல்முறைகள், நடைமுறைகளின் பெரிய அளவிலான டிஜிட்டல் மாற்றம், காகித அடிப்படையிலான கோப்புச் செயலாக்கத்தை இ-அலுவலகத்திற்கு மாற்றுவது, இ-டாஷ்போர்டுகளை உருவாக்குதல், அதிகரித்த செயல்திறனுக்காக முடிவெடுக்கும் ஆதரவு அமைப்புகள் போன்றவற்றை உள்ளடக்குகிறது.

மேலும் அனைத்து நிலைகளிலும் அரசுத் துறைகளுடன் முறையான மற்றும் தொடர்ச்சியான தொடர்புகள் தேவைப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு

தகவல் தொழில்நுட்பம் உள்பட அரசின் பல்வேறு துறைகளைக் கையாளும் நிர்வாக அனுபவம் உள்ள ஒரு மூத்த நபரை ஆலோசகராக நியமிக்குமாறு கோரிக்கைவைக்கப்பட்ட நிலையில், மேற்கண்ட முன்மொழிவை அரசு கவனமாக ஆராய்ந்த பிறகு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் பி.டபுள்யூ.சி. தாவிடர் தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு ஆலோசகராக நியமனம் செய்யப்படுகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மனதை உருக்கும் குரல்... தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவாரின் பாடல்: ViralVideo

ABOUT THE AUTHOR

...view details