தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வருகிற மார்ச்-18இல் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் - சபாநாயகர் - பேரவைத் தலைவர் அப்பாவு

வருகிற மார்ச் 18ஆம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜட் தாக்கல் செய்யவிருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

வருகிற மார்ச்-18இல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜட் தாக்கல் - பேரவைத் தலைவர்
வருகிற மார்ச்-18இல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜட் தாக்கல் - பேரவைத் தலைவர்

By

Published : Mar 8, 2022, 8:39 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில், இன்று(மார்ச்.8) பேரவைத் தலைவரும் சபாநாயகருமான அப்பாவு செய்தியாளரை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'வருகின்ற 18ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அன்றைய தினம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-2023ஆம் ஆண்டிற்கான காகிதமில்லா பட்ஜட்டை தாக்கல் செய்யவிருக்கிறார். காகிதமில்லா, வரவுசெலவுத்திட்டம் வாசிக்கப்பட உள்ளது.

தொடுதிரை கணினி வழங்கப்படும்

கடந்த ஆண்டு போன்றே தொடுதிரை கணினி வசதி சட்டப்பேரவை உறுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் அலுவல் ஆய்வுக் கூட்டம்கூடி, எத்தனை நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடத்தலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

மேலும், 2022-2023ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கை, 2021-2022-க்கான இறுதி துணைநிலை அறிக்கையும் வருகின்ற 24ஆம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் பேரவையில் தாக்கல் செய்யப்படும்.

பேரவையில் தாக்கல் செய்யப்படும் நிகழ்ச்சி அனைத்தும் நேரலை செய்யப்படும். முகக்கவசம் அணிந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவைக்கு வர வேண்டும். கரோனா பரிசோதனை தேவைப்படுவோர் கட்டாயம் செய்து கொண்டு வர வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:யுவராஜூக்கு ஆயுள் தண்டனை: 'தூக்கை விட சரியானது இது' - கோகுல்ராஜின் தாயார்

ABOUT THE AUTHOR

...view details