சென்னை: இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "பள்ளிக் கல்வித் துறையில் 2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில, மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார, தொகுப்பு வளமையங்களில் பணிபுரிந்து வரும் 500 ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு பணிமாறுதல் வழங்கப்பட உள்ளது.
ஆசிரியர் பயிற்றுனர்களாக உள்ளவர்கள் பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெறுவதற்கு 15ஆம் தேதியும், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 20ஆம் தேதியும் நடைபெறும். ஒரே ஆசிரியர் மீண்டும் விண்ணப்பித்தால் நீக்கப்படும்.
பொது மாறுதல் விண்ணப்பத்தில் மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் இரண்டும் சேர்த்தும் ஒரே விண்ணப்பத்தில் விண்ணப்பிக்கப்பட வேண்டும். ஓர் ஆசிரியர் பயிற்றுனர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டால் அவரது பெயர் கணினியில் தானாகவே முழுமையாக நீக்கப்பட்டுவிடும் என்பதால் அவர் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளமுடியாத நிலை ஏற்படும். எனவே, இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
கட்டாய பணியிட மாற்றம்
பணிமூப்பு அடிப்டையில் பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் செய்யப்படவேண்டிய மூத்த ஆசிரியர், பயிற்று பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து ஆசிரியர் பயிற்றுனர்களும் , பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதலுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.