தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு மீறல்: 64 நாள்களில் எட்டு கோடியை ரூபாயைத் தாண்டிய அபராதத் தொகை! - Tamilnadu news

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 64 நாள்களில் ஊரடங்கை மீறியதாக ஐந்து லட்சத்து 36 ஆயிரத்து 792 பேர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்துக் காவலர்
போக்குவரத்துக் காவலர்

By

Published : May 27, 2020, 3:45 PM IST

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

தற்போதைய நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளபோதும், சாலைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து, பிறர் அனைவரையும் வீடுகளில் இருக்கும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது.

இதில், ஊரடங்கு தொடங்கியது முதலே விதிகளை மீறுபவர்களைக் கண்காணித்து, வழக்குப்பதிவு செய்தும், வாகனங்களைப் பறிமுதல் செய்தும் காவல் துறையினர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் கடந்த 64 நாள்களில் ஊரடங்கு விதிகளை மீறியதாக, ஐந்து லட்சத்து 36 ஆயிரத்து 792 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மொத்தம் நான்கு லட்சத்து 25 ஆயிரத்து 64 வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக பறிமுதல் செய்யப்பட்டு, 8 கோடியே 9 லட்சத்து 28 ஆயிரத்து 684 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:தனிமைப்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் - பினராயி அதிரடி

ABOUT THE AUTHOR

...view details