சென்னையை அடுத்த ஆலந்தூர் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தர்ணா போராட்டம் நடந்தது.
இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை செயலாளர் வன்னியரசு, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் தாம்பரம் யாகூப், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் முகமது சித்தீக் உள்பட பலர் கலந்துகொண்டு, சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவைகளுக்கு எதிராகக் கண்டன உரை ஆற்றினர்.