தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடனை திருப்பிக் கொடுத்த லைகா - 'தர்பார்' வெளியீட்டில் பிரச்னை இல்லை

சென்னை: தர்பார் பட வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, லைகா நிறுவனம் 4 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை, உயர்நீதிமன்ற பதிவாளர் பெயரில் வழக்கு எண் மீது டெபாசிட் செய்துள்ளது.

lyca
lyca

By

Published : Jan 8, 2020, 10:53 PM IST

ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள 'தர்பார்' திரைப்படம் நாளை (ஜனவரி 9) திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்திற்கு தடை விதிக்கக் கோரி மலேசியாவை சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், ரஜினிகாந்த நடித்த '2.0' பட தயாரிப்பு பணிக்காக லைகா நிறுவனம் வாங்கிய 12 கோடி ரூபாய் கடனை வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயை தராமல், 'தர்பார்' படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், 4 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையோ அல்லது வங்கி உத்தரவாதத்தையோ லைகா நிறுவனம் டெபாசிட் செய்யும் வரை, தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிடக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 4 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை வழக்கு எண் மீது லைகா நிறுவனம் டெபாசிட் செய்தது. இதுகுறித்த தகவலை லைகா நிறுவனம் தரப்பு வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க: ஒவ்வொருவரின் செய்முறைகளையும் நாங்கள் மதிக்கிறோம் - மௌனம் கலைத்த 'லைகா'

ABOUT THE AUTHOR

...view details