தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீன்பிடிக்கும் போது சிறைப் பிடிக்கப்படும் மீனவர்கள் குடும்பத்திற்கான தின உதவித் திட்டம் தொடரும்! - சட்டப்பேரவை செய்திகள்

கடலில் மீன்பிடிக்கும் போது பிறநாட்டினரால் சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் தின உதவித் தொகை இந்த ஆண்டும் தொடரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டப்பேரவை

By

Published : Aug 29, 2021, 3:44 AM IST

சென்னை: மீனவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் தின உதவி இந்த ஆண்டும் (2021-2022) தொடரும் என மீன்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் சர்வதேச எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது பிற நாட்டின் கடலோர காவல்படை, ராணுவத்தினரால், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைப்பிடிக்கப்படும் அவலம் தொடர்ந்து நடைபெறுகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், சிறைப்பிடிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது பிறநாட்டினரால் சிறைப்பிடிக்கப்படும் மீனவர்களின் குடும்பத்திற்கு தின உதவித் தொகையாக ரூ. 250 தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டில் இவ்வாறு சிறைபிடிக்கப்பட்ட 36 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2.90 லட்சம் நிவாரணமாக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டும் தின உதவித் திட்டம் செயல்படுத்தப்படும்.

அதேபோல, மீன்பிடிக்கச் சென்று 30 நாள்களுக்கும் மேலாக வராமல் காணமால் போயிருக்கும் மீனவர்களின் இரண்டு ஆண்டுகளுக்கு அல்லது குழு விபத்து காப்புறுதி திட்டம் தமிழ்நாடு மீனவர் நலவாரியம் ஆகியவற்றின் கீழ் நிவாரண உதவி வழங்கும் திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும் என்று மீனவளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கடற்பாசி பல்நோக்கு பூங்கா அமைக்க நடவடிக்கை - அனிதா ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details