சென்னை:இயக்குநர் சுசீந்திரன் இசையமைப்பாளர் D.இமான் ஆகியோர் 7ஆவது முறையாக புதிய படமொன்றில் இணைந்து பணியாற்றவுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் சுசீந்திரன், பிரபல இசையமைப்பாளர் D. இமான் உடன் இணைந்து பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி கிளப் என ஆறு படங்களில் பணிபுரிந்துள்ளனர்.
நேற்று இசையமைப்பாளர் D.இமான் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து கூறியுள்ள இயக்குநர் சுசீந்திரன், தான் 7ஆவது முறையாக டி.இமானுடன் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும், பாடல் கம்போசிங் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.